எமது முதல் குறியே நீங்கள்தான்; பிரித்தானியாவை எச்சரித்த புடின் கூட்டாளி
மூன்றாவது உலகப் போரில் முதலில் லண்டன் மீது தான் வெடிகுண்டு வீசப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) கூட்டாளியும் , ரஷ்ய நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினருமான, ரிசர்வ் ஜெனரல் எம்.பி ஆண்ட்ரே குருலியோவ் (Andrei Kozyrev) கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு (Vladimir Putin) ஆதரவான முக்கிய அரசியல் கட்சியான யுனைடெட் ரஷ்யாவை இப்போது பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த தளபதியாகவும் லெப்டினன்ட் ஜெனரல் குருலியோவ் (Andrei Kozyrev) இருக்கிறார் .
நேட்டோ பால்டிக் நாடுகள் மீதான ரஷ்ய படையெடுப்பை ஆதரிக்கும் ஆண்ட்ரே குருலியோவ் (Andrei Kozyrev)ரஷ்ய அரசு தொலைக்காட்சியான Channel One Russia-விற்கு கூறுகையில்,
மூன்றாம் உலகப்போர் வருமானால், ரஷ்யா, முதலில் வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினை குறிவைக்காது, பதிலாக முதல் ஏவுகணை லண்டன் மீது தான் ஏவப்படும் என எச்சரித்தார்.
ரஷ்யாவை முற்றுகையிடும் மேற்கு நாடுகளைத் தடுக்க வேறு வழியில்லை என்றும் கூறினார். அத்தகைய நடவடிக்கை நேட்டோவின் பிரிவு ஐந்தையும், மூன்றாம் உலகப் போரையும் தூண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் முதல் விமான நடவடிக்கையின் போது எதிரியின் விண்வெளி செயற்கைக்கோள்களின் முழுவதையும் அழிப்போம் என கூறிய புடின் கூட்டாளி, அவர்கள் அமெரிக்கர்களாகவோ அல்லது பிரித்தானியராகவோ இருந்தால் யாரும் கவலைப்பட மாட்டோம், நாங்கள் அனைவரையும் நேட்டோவாகப் பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் மூன்றாவது உலகப் போரில் இரண்டாவதாக, எல்லா இடங்களிலும் மற்றும் 100 சதவீதம் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு முழு அமைப்பையும் குறைப்போம் எனதெரிவித்த அவர், மூன்றாவதாக, நாங்கள் நிச்சயமாக வார்சா, பாரிஸ் அல்லது பெர்லினில் இருந்து தொடங்க மாட்டோம் என்றும் முதலில் தாக்கப்படுவது லண்டன் தான் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் குருலியோவ் (Andrei Kozyrev) எச்சரித்துள்ளார்.