கனடிய ஆய்வாளர்களின் சாதனை
கனடாவின் மனிட்டோபா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கனடா இதுவரை செல்லாத இடமான நிலாவின் சுற்றுப்பாதைக்கு செல்கின்ற ஒரு புதிய செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றனர்.
மனிட்டோபா பல்கலைக்கழகத்தின் ஸ்டார்லெப் STARLab குழுவும், மெகாலேன் ஏரோஸ்பேஸ் Magellan Aerospace நிறுவனமும் இணைந்து, பால்பெட்டி அளவிலான கியுப்செட் CubeSat எனப்படும் சிறு செயற்கைக்கோளை உருவாக்கி வருகின்றன.
இது நிலாவைச் சுற்றிவரும் முதல் கனேடிய செயற்கைக்கோளாக வரவிருக்கிறது.

இந்த திட்டத்திற்காக மெகாலேன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திற்கு கனடிய விண்வெளி முகாமை நிறுவனம் 6.9 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது.
நிலாவில் கனேடிய தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.
அபோல்லோ 11 லேண்டர் கால்கள் அதற்குச் சான்றாக குறிப்பிட முடியும் எனினும், நிலா சுற்றுப்பாதையில் கனடா தனது சொந்த செயற்கைக்கோளை அனுப்புவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயற்கைக்கோள் 2027 ஆம் ஆண்டு இறுதி காலத்தில் ஏவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது நிலாவின் கனிமங்களை வரைபடமாக்கி, எரிபொருள் உற்பத்திக்கோ அல்லது எதிர்கால குடியேற்றத்துக்கோ பயனுள்ள வளங்களைக் கண்டறிய தகவல்களைச் சேகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.