உறவினர்கள் இல்லாததால் இணையத்தில் அழைப்பு விடுத்த இளைஞர் ; திருமணத்தில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

Wedding China
By Sahana Nov 01, 2026 10:44 PM GMT
Report

சீனாவில் உறவினர்கள் யாரும் இல்லாததால் தனது திருமணத்திற்கு விருந்தினர்கள் வரமாட்டார்கள் எனக் கவலைப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, இணையவாசிகள் வழங்கிய எதிர்பாராத ஆதரவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஸு செங்ஹாங் (Xu Chenghong) என்ற இளைஞரே இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் நாயகனாவார்.

இவர் சிறுவனாக இருந்தபோதே தனது தந்தையை இழந்துள்ளார். பின்னர் அவரது தாயார் மறுமணம் செய்துகொண்டதால், அவரும் அவரது மூத்த சகோதரரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர்.

உறவினர்கள் இல்லாததால் இணையத்தில் அழைப்பு விடுத்த இளைஞர் ; திருமணத்தில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் | Over 10 000 People Turn Up For His Wedding

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்துவந்த ஸு செங்ஹாங், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்துள்ளார்.

எனினும், தனது திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்துவதற்கு உறவினர்கள் யாரும் இல்லையே என்ற கவலை அவரை வாட்டியுள்ளது.

இதனால், தனது திருமணத்திற்கு இணையவாசிகளை அழைக்க அவர் முடிவெடுத்துள்ளார். இதற்கமைய, சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு, தனது நிலைமையை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

அந்தக் காணொளியில், தான் கடுமையாக உழைத்து விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான பணத்தைச் சேமித்துள்ளதாகவும், ஆனால் திருமணத்திற்கு வருகைதந்து வாழ்த்துவதற்கு உறவினர்கள் அதிகம் இல்லாததால் இணையவாசிகளை அன்புடன் அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். இதன் விளைவாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருமணத்தில் நேரடியாகக் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வெறுமனே விருந்தினர்களாக மட்டும் இருக்காமல், தங்களால் இயன்ற பல்வேறு உதவிகளையும் செய்துள்ளனர்.

உறவினர்கள் இல்லாததால் இணையத்தில் அழைப்பு விடுத்த இளைஞர் ; திருமணத்தில் குவிந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் | Over 10 000 People Turn Up For His Wedding

சிலர் திருமண அலங்காரப் பணிகளுக்கு உதவியதுடன், வேறு சிலர் பரிசுப் பொருட்களையும் சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.

மேலும், பல சமையல் கலைஞர்கள் தாமாக முன்வந்து திருமண விருந்துக்கான உணவுகளை இலவசமாகச் சமைத்துக் கொடுத்துள்ளனர். அத்துடன், திருமண ஊர்வலத்திற்குத் தேவையான சொகுசு வாகனங்களையும் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அவர்களில் ஒருவர், மணமக்களின் பயணத்திற்காகத் தனது 'மேபாக்' (Maybach) சொகுசு காரையே வழங்கியுள்ளார். மேலும், திருமண மெழுகுவர்த்திகள் மற்றும் அலங்காரப் பொருட்களைக் கொண்டு வந்து திருமண இல்லத்தையே விழாக்கோலமாக மாற்றியுள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான தகவல்களை 'u/Sapphire-Crystal' என்ற ரெடிட் பயனர் பகிர்ந்துள்ளார். குறித்த பதிவு 3,000-க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தனக்கு உறவினர்கள் இல்லை என்ற கவலையில் இணையவாசிகளுக்கு அழைப்பு விடுத்த இளைஞருக்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து குடும்பமாகவும் நண்பர்களாகவும் துணைநின்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் பெற்றுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US