சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்த்தவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிநிலை
பாகிஸ்தானின் லாஹோர் நகரில், ஒரு வீட்டில் சட்டவிரோதமாக சிங்கத்தை செல்லப் பிராணியாக வளர்த்தவர்களை அதிகாரிகள் கது செய்துள்ளனர்.
குறித்த சிங்கம் சுவரை தாண்டி தப்பி, ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்–சிறுமிகளை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜொஹான் டவுனில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து விலங்கைக் கட்டி வைத்திருந்தனர்.
சிங்கம் தப்பியபோது, 5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஒரே சாலையில் இருந்தபோது தாக்குதலுக்குள்ளானார்கள்.
பாதிப்படைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு முகம் மற்றும் கைகளைச் சுற்றி காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு உயிராபத்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கேமரா காட்சிகளில், சிங்கம் சுவரை தாண்டி பெண் மீது பாய்ந்து அவரை தரையில் தள்ளுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
பின்னர், வீட்டைச் சேர்ந்த ஒருவரால் சிங்கம் விரட்டப்பட்டு, அங்கிருந்து ஓடிச்சென்ற நிலையில், அருகில் இருந்த குழந்தைகளையும் தாக்கியது.
வெள்ளிக்கிழமை காலை, லாஹோர் காவல்துறை மூன்று பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் உதவி ஆய்வாளர் முகம்மது ஃபைசல் காம்ரான் உறுதிப்படுத்தினார்.“சிங்கமும் கைப்பற்றப்பட்டு வனவிலங்கு துறைக்கு ஒப்படைக்கப்பட்டது” என கூறினார்.