ரஷிய அதிபர் புதின் தொடர்பில் வெளியான பகீர் தகவல்!
உலகின் மிகவும் ஆபத்தான விஷம் ரஷிய அதிபர் புதினிடம் (Vladimir Putin) உள்ளதாக கூறப்படுகிறது. அதை அதிபர் புடின் (Vladimir Putin) தனது எதிரிகள் மீது பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அந்த ஆபத்தான விஷத்தின் பெயர் ஸ்ட்ரைக்னைன் என கூறப்படுகின்றது. இது ரஷிய உளவு நிறுவனமான கேஜிபியால் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஷம் குறித்து நச்சுயியல் நிபுணர் நீல் பிராட்பரி (Dr. Neil Bradbury )கூறுகையில், ஸ்ட்ரைக்னைன் என்பது உலகின் மிகவும் வேதனையான வேதிப்பொருள். உடலுக்குள் போனவுடனே பயங்கர வலியை கொடுக்கிறது.
எலும்புகள் மற்றும் தசைகளை ஒன்றாக இணைக்கும் பிணைப்பை உடைத்து, உடல் முற்றிலும் நடுங்குகிறது. இந்த விஷத்தின் மோசமான விஷயம் என்னவென்றால், அது மிகவும் மெதுவாக செயல்படுவதாகும்.
ஒரு மனிதனைக் கொல்ல பல மணி நேரம் ஆகும். இதனுடன், இது பாதிக்கப்பட்டவரின் உணர்வுகளை பாதிக்காது, மேலும் அவர் ஒவ்வொரு வலியையும் உணர்கிறார்.
அதுமட்டுமல்லாது உடலில் உள்ள தசைகள் தொடர்ந்து உடைந்து வலியை உணர்த்துகிறது எனவும் அவர் கூறினார்.