ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்
ஆப்கானிஸ்தான் மீது, பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், பாகிஸ்தான் அடுத்தடுத்து குண்டுகளை வீசியது.
லாமன் உட்பட 7 கிராமங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் சமீபமாக நடந்துவரும் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தான் தான் காரணம் என அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது.
குறிப்பாக, தஹ்ரிக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசு அடைக்கலம் கொடுக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானின், பக்திகா மாகாணத்தில் உள்ள பர்மல் மாவட்டத்தில், ஏழு கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிலும், பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் முர்க் பஜார் கிராமம் கடுமையாக சேதமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.