ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மீண்டும் அத்துமீறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் சம்பா பகுதியில் ட்ரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிசத்தம் கேட்டதாக ஏ.என்.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தி முடித்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்கி உள்ளது.
பாகிஸ்தானின் ட்ரோன்கள் மீண்டும் அத்துமீறியதை தொடர்ந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் சம்பா, கதுவா, வைஷ்ணவோதேவி வட்டாரத்தில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி உள்ளது.