ஈரான் மீது பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்
அண்டை நாடான ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஈரான் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.
எவ்வாறாயினும், இத்தாக்குதலில் மூன்று பெண்களும் நான்கு குழந்தைகளும் கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜெய்ஷ் அல்-ஆதி பயங்கரவாத அமைப்பின் இரண்டு முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈராக் மற்றும் சிரியா மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது, அவர்கள் பயங்கரவாத குழுக்களை குறிவைத்ததாகக் கூறினர்.