பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு!

Blast Pakistan Bomb Railway Explosion Rail Track
By Shankar Mar 31, 2022 05:06 PM GMT
Shankar

Shankar

Report

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினால் பல பகுதிகளில் புகையிரதம் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) தலைமையிலான அரசு நடந்து வருகிறது.

தற்போது அவரது அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள சூழலில், அந்நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், சிந்த் மாகாணத்தில் உள்ள கொத்ரி பகுதியின் அருகே ரயில் தண்டவாளத்தில் மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வைத்து அதனை வெடிக்க செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில், அதன் ஒரு பகுதி சேதமடைந்து உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருகிறது. அது முடிந்தவுடன், ரெயில் சேவை மீண்டும் இயங்கும் என கூறியுள்ளனர். துணை ராணுவ படையினர், போலீசார் மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளன.

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவும் அந்த பகுதிக்கு சென்று குண்டுவெடிப்புக்கான இயற்கையான காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக, மாகாணத்தின் பல பகுதிகளில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரயில்வே தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கு எந்தவொரு அமைப்பும் அல்லது தனிநபரும் பொறுப்பேற்கவில்லை. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US