இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு : இஸ்ரேலின் உண்மை முகத்தை வெளிகாட்டும் பலஸ்தீன அரசு
இஸ்ரேல் – ஹமாஸ் முதற் கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இரண்டாம் கட்டமாக தொடர்வதில் உடன்பாடு இல்லாமல் முடிவடைந்ததையடுத்து, காஸா பகுதிக்குள் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு தொடர்பில் பலஸ்தீன அரசு தமது ஆதங்க கருத்தை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய அரசின் செயற்பாடு
காசா பகுதிக்கு உதவி வருவதை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்திருப்பது, அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அதன் கடமைகளைத் தவிர்ப்பதற்கும் ஒரு புதிய உறுதிப்படுத்தலாகும்.
இது இஸ்ரேலிய அரசின் அசிங்கமான, குரோதம் நிறைந்த முகத்தை வெளிகாட்டியுள்ளது.
மேலும்,இச் இஸ்ரேலிய எமது நாட்டு மக்களுக்கு எதிரான போரின் தொடர்ச்சியாகவும், எமது நாட்டு மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் குடிநீர் மற்றும் மருத்துவ தேவைகள் அனைத்தையும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்துவதாக உள்ளது.
இஸ்ரேல் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சாசனம் போன்றவற்றை புறக்கணிப்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் காஸாவின் அனைத்து உற்பத்தி துறைகளும் முடக்கப்பட்டுள்ளது, தங்கள் உணவை பெறுவதற்கு குறித்த மனிதாபிமான உதவிகளையே முழுமையாக நம்பியுள்ள காஸா மக்களுக்கு எதிரான பட்டினிப் போரை ஆரம்பித்துள்ளதை வெளிப்படுத்துகின்றது என பலஸ்தீன அரசு குறிப்பிட்டுள்ளது.