சார்ள்ஸ் மன்னருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் செய்ய முடியாது
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு விசுவாசமாக செயற்படுவதாக பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என கனேடிய அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் அரசியல் அமைப்பின் பிரகாரம் புதிய அரசியல்வாதிகள் பதவியில் அமர்த்தப்படும் போது பிரித்தானிய முடிக்குரியவர்களுக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி மொழி வழங்கப்பட வேண்டும்.
எனினும் இவ்வாறு உறுதிமொழி வழங்க முடியாது என கியூபிக்கோ கட்சியின் சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபை சட்டத்திற்கு அமைய உறுதிமொழி வழங்கி பதவிப் பிரமாணம் செய்யத் தயார் என தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் பெயரில் அவருக்கு விசுவாசமாக இருப்பதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.