நடு வானில் விமானக் கதவை திறக்க முயற்சித்த கனேடியர்;மடக்கிப் பிடித்த பயணிகள்
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது விமான கதவை திறக்க முயற்சித்த கனேடியர் ஒருவரை சக பயணிகள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
போலந்தின் வார்ஷாவிலிருந்து றொரன்டோ நோக்கிப் பயணித்த விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடு வானில் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் கனேடிய பிரஜை வன்முறையாக செயற்பட்டதாக சக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
விமான பணிப்பாளர்கள் மதுபானம் வழங்க மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த குறித்த பயணி இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த கனேடிய பிரஜை, விமானப் பணியாளரையும் தாக்குவதற்கு முயற்சித்துள்ளார்.
குறித்த நபரின் செயற்பாட்டினால் றொரன்டோவில் தரையிறக்கப்பட வேண்டிய விமானம் ஐஸ்லாந்தின் ரெய்ஜாவிக்கில் தரையிறக்கப்பட்டு அங்கிருந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
தண்ணீர் போத்தல்களினால் விமானப் பணியாளர்களை தாக்கியதுடன் சக பயணிகள் மீது குறித்த நபர் உமிழ்ந்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக விமானம் றொரன்டோ நோக்கிப் பயணிக்காது மீளவும் போலந்து திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.