மீண்டும் உச்சம் தொட்ட பாதிப்பு எண்ணிக்கை: தடுமாறும் கனேடிய மாகாணம்

Arbin
Report this article
கனடாவில் ஆல்பர்ட்டாவில் கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் உச்சம் தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பெருமளவு உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான தரவுகளின் அடிப்படையில் ஆல்பர்ட்டாவில் 5,181 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 11வது முறையாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உச்சம் கண்டுள்ளது. தற்போது ஆல்பர்ட்டா முழுமையும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் 265ஐ தொட்டுள்ளது.
கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1,063 என தெரிய வந்துள்ளது. இதுவும் கொரோனா பரவலுக்கு பிறகு ஐந்தாவது பெரிய எண்ணிக்கை என்றே தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் திங்கட்கிழமை மட்டும் கொரோனாவால் 23 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். இதனால் மாகாணம் முழுமையும் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,645 என தெரிய வந்துள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணத்தை பொறுத்தமட்டில் தகுதியுடையவர்கள் 83 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, 73.8 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.