கனடாவில் முப்பரிமாண அச்சாக்க துப்பாக்கிகளுடன் ஓருவர் கைது
கனடாவில் முப்பரிமாண அச்சாக்க துப்பாக்கிகளுடன் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரின்ஸ் எட்வர்ட் தீவில் (PEI) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்லான்டிக் கனடாவில் முதல் முறையாக ஒருவர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை மிரட்டியதாக தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸாரின் விசாரணை ஆரம்பாகியுள்ளது.

பிப்ரவரி 24 அன்று நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகு, பொலிஸார் டேனியல் டெஸ்மண்ட் கிரௌடரை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து பல துப்பாக்கி கூறுகளையும் பறிமுதல் செய்தனர். கிரௌடருக்கு கோடைக்காலத்தில் பல துப்பாக்கி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும், ஆகஸ்ட் 18 முதல் அவருக்கு பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கடுமையான நிபந்தனைகள் அமல்படுத்தப்பட்டன.
பயங்கரவாத செயல்பாட்டை எளிதாக்குவதற்காக ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் 3D-பிரிண்ட் துப்பாக்கி/கூறுகளை தயாரித்தல் மற்றும் ஆயுதங்கள், 3D-பிரிண்டிங் உபகரணங்கள் போன்றவற்றை வைத்திருத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவை நேரடியாக அல்லது மறைமுகமாக பயங்கரவாத செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமெனும் நோக்கம் உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபருடன் தொடர்புடைய பெரிய வலையமைப்பு அல்லது சமூகத்திற்கு உடனடி ஆபத்து என எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.