புகையிரதத்தால் பறிபோன இரு உயிர்கள்
புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த ஓய்வூதியர் மேல் மாடு விழுந்ததில் சம்பவம் இடத்திலேயே நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசு வடிவில் வந்த விதி
இந்தியாவின் ராஜஸ்தானிலுள்ள Alwar என்ற இடத்தில் ஷிவ்தயாள் ஷர்மா (Shivdayal Sharma, 82) என்ற நபருக்கே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் பசு ஒன்றின் மீது மோத அப் பசு சுமார் 100 மீற்றர் உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அப் பசு ஷர்மா மீது வந்து விழ ஷர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதே நேரத்தில் ஷர்மாவுக்கு அருகில் நின்ற ஒருவர் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
மேலும் இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து பசுக்கள் ரயில் தண்டவாளங்களுக்கு வருவதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள புல் உணவுக்கழிவுகள் ஆகியவை அகற்றப்பட்டுவருவதுடன் சில இடங்களில் தண்டவாளங்களை நெருங்க முடியாத வகையில் வேலி அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.