கனடாவில் காய்ச்சலுக்காக சென்ற 3 வயது குழந்தைக்கு பைசர் தடுப்பூசி
கனடாவில், காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்த வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித்தோபாவில் வாழும் Jenna Bardarson, தனது மூன்று வயது மகளான டாலிக்கு ப்ளூ தடுப்பூசி பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு, சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் டாலிக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் டாலியின் தாய்.
முன்னதாக குழந்தைகளுக்கு கூட தடுப்பூசி செலுத்துவதற்கும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அந்த வயது வரம்பானது 5 வயதிற்கு மேற்பட்டோருக்கு மற்றுமே அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், டாலியைப் போல ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எந்த கொரோனா தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
Jennaவுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், தாய்க்கும் குழந்தைக்கும் காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டதுடன், டாலி வாந்தியும் எடுக்க, அவர் கவலைக்குள்ளாகியிருக்கிறார்.