வெனிசுலா நிலநடுக்கம்; தொலைபேசியில் முன்கூட்டிய வந்த எச்சரிக்கை ; பல உயிர்களை காத்த தொழில்நுட்பம்

Earthquake Death Venezuela
By Vironika Jun 25, 2026 09:01 PM GMT
Report

தொலைபேசியில் உள்ள கூகுள் எண்ட்ரோய்ட் நிலநடுக்க எச்சரிக்கை தொழில்நுட்பம், ஆரம்பகட்ட நில அதிர்வை கண்டறிந்து பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசியுலாவில்  ரிச்டர் 7.2 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் 2-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.

வெனிசுலா நிலநடுக்கம்; தொலைபேசியில் முன்கூட்டிய வந்த எச்சரிக்கை ; பல உயிர்களை காத்த தொழில்நுட்பம் | Phone Alert Issued Before Venezuela Earthquake

நிலநடுக்கங்கள்

இந்த 2 நிலநடுக்கங்களும் வெனிசுலாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக பயங்கரமான நிலநடுக்கங்கள் என அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 2 பயங்கர நிலநடுக்கங்களை தொடர்ந்து, சுமார் 20 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை வெளியான தகவல்களின்படி, வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 164 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 971 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே வெனிசுலாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு அவர்களது தொலைபேசிகளில் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்பு இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இருப்பினும் அந்த சிறிய கால அவகாசத்தில் பலர் உஷாராகி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். கூகுள் நிறுவனத்தின் இந்த தொழில்நுட்பம் பல உயிர்களை காப்பாற்றியுள்ளது.

எண்ட்ரோய்ட் செல்போன்களில் கூகுள் நிறுவனத்தின் ‘நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு’ என்ற தொழில்நுட்பம் உள்ளது. இது ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து எச்சரிக்கைகளை அனுப்புகிறது.

இதனை எண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் செல்போனில் உள்ள செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று பாதுகாப்பு மற்றும் அவசரநிலை என்பதை தேர்வு செய்து, நிலநடுக்க எச்சரிக்கையைஆன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தொழில்நுட்பம் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில்லை. ஆனால், ஆரம்பகட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து, அந்த பகுதியில் உள்ள பயனர்களை எச்சரிக்கை செய்கிறது.

இந்த தொழில்நுட்பம், மிகச்சிறிய நில அதிர்வுகளை கண்டறியக்கூடிய சென்சார்களைக் கொண்ட லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை சார்ந்து இயங்குகிறது. இது போன்ற தொழில்நுட்பங்கள் மேலும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் இயற்கை பேரிடர்களின்போது மனித உயிர்களை காப்பது எளிதாகலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US