கனடாவில் 62 வயதான மருத்துவரின் மோசமான செயல்
கனடாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பணி செய்து வந்த மருத்துவர் நோயாளியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 7ஆம் திகதி, மார்க்ஹாம் ரோட்டில் அமைந்துள்ள மருத்துவ மையத்தில் ஒருவர் வைத்தியரை சந்தித்திருந்தார்.
பாலியல் ரீதியான சீண்டல்
மருத்துவ பரிசோதனை நடைபெறுகையில், அந்த மருத்துவர் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் கடந்த 2023 நவம்பரிலும் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
62 வயதான சேபர் அப்தெல் மலௌகா அப்தெல் மலக் என்பவரே குறித்த மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்மீது இரண்டு தனித்துவமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.