கனடாவில் பிஸ்தா உணவுப் பொருட்கள் குறித்த எச்சரிக்கை
கனடாவில் பிஸ்தா மற்றும் பிஸ்தா கலந்த பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகை உணவுப் பொருட்களை சந்தையிலிருந்து மீளப்பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கனடாவின் உணவு பரிசோதனை நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
பல மாகாணங்களில் பரவியுள்ள சால்மொனெல்லா தொற்றுடன் தொடர்புடைய பிஸ்தா உணவு காரணமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அலோ சிமோன் பண்டக் குறியைக் கொண்ட பிஸ்தா பொருட்கள் மற்றும் கியூபெக் மாநிலத்தில் விற்கப்பட்ட சில இனிப்புகள் அண்மைய மீளப்பெறலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவை சாக்லேட்டில் மூடப்பட்ட பிஸ்தா-சவர்செர்ரி, பிஸ்தா-ராஸ்பெரி, ரோஜா இதழ்கள், ஈஸ்டர் முட்டை சாக்லேட் பொருட்கள் மற்றும் பக்லவா இனிப்புகளை உள்ளடக்கியவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உபயோகிப்பவர்கள் இந்தப் பொருட்கள் தங்களிடம் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும், உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீளப்பெறப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சால்மொனெல்லா அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
62 நோய்த்தாக்குதல்களில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 45 சம்பவங்கள் கீயூபெக்கில் பதிவாகியுள்ளன.