நிலநடுக்கத்தினால் ஆப்கானிஸ்தானில் பல கிராமங்கள் நிர்மூலம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பல கிராமங்கள் அழிவடைந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கை சுமார் 800 ஆக அதிகரித்துள்ளதா கூறப்படுகின்றது.
அதேநேரம் குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு 2 ஆயிரத்து 800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள்
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, கிழக்கு ஆப்கானிஸ்தானில 6.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவானதை தொடர்ந்து, அதன் அண்டை நகரான நங்கஹார் (Nangarhar) மாகாணத்திலுள்ள ஜலலாபாத்( Jalalabad) நகருக்கு அருகே குனர் (Kunar) மாகாணத்திலுள்ள சில நகரங்களைத் தாக்கியது.
நங்கஹார் மாகாணத்தில் உள்ள ஜலலாபாத் நகரிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவில், குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் சுமார் 8 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தையடுத்து பல அதிர்வுகள் பின்னர் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்ளிருந்து காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.