கனடாவில் இந்த ரக வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை
கனடாவில் ஃபோர்ட் நிறுவனத்தின் சில வகை மாடல் கார்கள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரேக் கோளாறு காரணமாக சுமார் 52,000-க்கும் மேற்பட்ட எஸ்.யு.வீ வாகனங்களை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஃபோர்ட் நிறுவனம், சில மாடல்களில் பின்புற பிரேக் குழாய்கள் செயலிழந்து, பிரேக் திரவம் கசிந்து “பிரேக் செயல்திறன் குறையலாம்” என்ற காரணத்தால் மொத்தம் 52,547 SUV வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பிரேக் கோளாறு
பிரேக் திறன் குறைவதால் வாகனத்தை நிறுத்தும் தூரம் அதிகரிக்கும்; இதனால் விபத்து அபாயம் உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரும்பப் பெறல் பின்வரும் மாடல்களை அடிப்படையாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
2015 முதல் 2018 வரை தயாரிக்கப்பட்ட Ford Edge மாடல்கள் 2016 முதல் 2018 வரை தயாரிக்கப்பட்ட Lincoln MKX மாடல்கள் ஃபோர்ட் நிறுவனம், திருத்த நடவடிக்கைகள் குறித்து வாகன உரிமையாளர்களுக்கு தபால் மூலம் தகவல் தரும் என தெரிவித்துள்ளது.
எனினும், முழுமையான விவரங்கள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவல்களுக்கு 1-800-565-3673 என்ற தொலைபேசி எண் மூலம் அல்லது ஃபோர்ட் இணையதளத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம் என நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.