பிரித்தானியாவுக்குள் நுழைய கடவுச்சீட்டு தேவையில்லை?
பிரித்தானியா,மான்செஸ்டர் விமான நிலையத்தில், பிரித்தானியர்கள் கடவுச்சீட்டு இல்லாமலேயே நுழையும் திட்டம் ஒன்று ஒக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை அனுமதிக்கும் திட்டம் ஒன்றை விமான நிலையம் ஒன்றில் பிரித்தானியா முயற்சி செய்துள்ளது.

ஒக்டோபர் மாதம் முதல் சோதனை
அதில் வெற்றியும் கிடைத்துள்ளதால், இந்த திட்டம் பல விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
பிரித்தானியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பும் பட்சத்தில், அவர்களுடைய கடவுச்சீட்டை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக இனி அவர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்காது.
மான்செஸ்டர் விமான நிலையத்தில், பிரித்தானியர்கள் கடவுச்சீட்டு இல்லாமலேயே நுழையும் திட்டம் ஒன்று ஒக்டோபர் மாதம் முதல் சோதனை செய்து பார்க்கப்பட்டது.
அவர்கள் மின்னணு நுழைவாயில் வழியாக விமான நிலையத்துக்குள் நுழையும்போதே, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள கருவிகள், அவர்களுடைய முகங்களை ஸ்கேன் செய்து, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர்களை விமான நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்கும்.
அதேவேளை பிரித்தானியர்களுக்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள இந்த திட்டத்தை அவுஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருபவர்களுக்கும் அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.