ஓடுபாதையில் விமானம் தரையிறக்கும் போது தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
அமெரிக்காவில் உள்ள விமான நிலையமொன்றின் ஓடுபாதையில் தரையிறங்கிய போது விமானத்தின் லேண்டிங் கியர் தீப்பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ321-200 ரக விமானம் 1326 சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
திடீரென விமானிகளில் ஒருவர் விமானத்தில் இருந்து கரும்புகை வெளியேறியதை கவனித்து அவசர நிலையை அறிவித்தனர்.
Frontier Airlines A321-200 landing gear catches fire after landing at Las Vegas Harry Reid International Airport.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) October 6, 2024
Flight 1326 was on its way from San Diego to Las Vegas when the pilots detected smoke and declared an emergency, Frontier said in a statement.
All passengers and… pic.twitter.com/1Lk6jlMRPD
இதனைத்தொடர்ந்து விமானத்தில் தீப் பிடித்தது. இருப்பினும், விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினர்.
விமானத்தில் தீ அணைக்கப்பட்ட நிலையில், அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.