விழுந்து சிதறிய விமானம்; குடும்பத்தோடு பலியான முன்னாள் ரேஸிங் செம்பியன்
அமெரிக்காவை ஸ்டேட்ஸ்வில்லி விமான நிலையத்திலிருந்து புளோரிடாவை நோக்கிப் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், எழுவர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உந்துருளி பந்தய செம்பியன் கிரெக் பிபிளின் குடும்பத்தினர் உட்பட எழுவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் சுமார் 2,000 அடி உயரத்தை பயணித்து கொண்டிருந்த போது விமானத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுப்பாதையை தாண்டிச் சென்று சுற்றுச்சுவர் மீது மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விமானத்தில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.