கனடாவில் விமான விபத்து! இரண்டு பேர் உயிரிழப்பு
கனடாவின் சஸ்கட்ச்வானில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சஸ்கட்ச்வானின் ஷவுனாவோன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
செஸ்னா 172 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சிறியி விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
எஸ்டிவான் பகுதி நோக்கிப் பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விமானம் விபத்துக்கு உள்ளாகி கீழே வீழ்ந்த பின்னர் விமானம் தீப்பற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கனடாவின் போக்குவரத்து சபை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.