எம்.பியுடன் விபத்தில் சிக்கிய விமானம் ; 15பேர் பலி
கொலம்பியாவில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானத்தில் எம்.பி. உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலா எல்லையையொட்டிய பகுதியில் கொலம்பியா அரசுக்கு சொந்தமான சதேனா நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது.

குகட்ட நகரில் இருந்து புறப்பட்ட விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 2 விமான ஊழியர்கள் மற்றும் 13 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விமான விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவர் எம்.பி., என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.