தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசர அவசரமாக பாலத்தின் மீது தரையிறங்கிய விமானம்
பிரான்சில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த சமயத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து விமானி மேற்கு ஜெர்மனியில் பிரான்சின் எல்லைகளில் உள்ள Pirmasens நகருக்கு அருகிலுள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் உயரமான பாலத்தில் தரை இறக்கினார்.
அந்த சமயத்தில் பாலத்தின் எதிரே வந்துக் கொண்டிருந்த டிரக் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் விமானிக்கு லேசான காயமும், டிரக் டிரைவர் காயமின்றியும் தப்பியுள்ளனர்.
இந்த விபத்தின் காரணமாக கொட்டிக்கிடந்த எரிபொருளையும், விமானத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி சரிசெய்ய முழு சாலையையும் முழுமையாக அடைக்க வேண்டியிருந்தது.
அதன்பின் மாலைக்குள் பாதைகள் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இவ்வாறு நடந்த விபத்தில் சுமார் 60,000 யூரோகள் மதிப்புடைய பொருட்சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.