கோல்ஃப் மைதானத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
ஆஸ்திரேலியாவில் சிறிய விமானம் ஒன்று கோல்ஃப் மைதானத்தில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது. விமானியும் விமானத்தில் இருந்த ஒரு பயணியும் சிறிய காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகின்றது.
சிட்னி நகரில் உள்ள Mona Vale கோல்ஃப் மைதானத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. விமானத்தில் இருந்தவர்கள் விமானி பயிற்றுவிப்பாளரும் அவரது மாணவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதை கண்ட மைதானத்தில் இருந்தவர்கள் உடனடியாக விமானத்தில் இருந்தோருக்கு உதவச் சென்றனர்.
விமானத்தில் இருந்த இருவருக்கும் மைதானத்தில் மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்த . பின்னர் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரும் சீரான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.