நடுவானில் பயணியின் அதிர்ச்சி மரணம்: வெளியான பகீர் காரணம்
நியூ இங்கிலாந்துக்கு செல்லும் வழியில், நடுவானில் விமான பயணி ஒருவர் இறந்த விவகாரத்தில் தற்போது விசாரணை கோரப்பட்டுள்ளது.
ஐந்து பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானமானது திடீரென்று மேகமூட்டத்தில் சிக்கிய நிலையில், கனெக்டிகட் பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயணி ஒருவர் திடீரென்று மரணமடைந்த சம்பவம் தொடர்பில் FBI அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
அந்த விமானமானது கீன், நியூ ஹாம்ப்ஷயரில் இருந்து லீஸ்பர்க், வர்ஜீனியாவிற்கு பயணப்பட்டுள்ளது. திடீரென்று மேகமூட்டத்தில் சிக்கிய அந்த விமானம் கடுமையாக குலுங்கியுள்ளது.
இதில் ஒருபயணி நடுவானில் மரணமடைந்துள்ளார். 3ம் திகதி மதியத்திற்கு மேல் சுமார் 3.50 மணியளவில் கனெக்டிகட் மாகாண பொலிசாருக்கு மருத்துவ உதவி கோரி தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஆம்புலன்ஸ் மூலமாக பயணி ஒருவர் அருகாமையில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மேலும், மேகமூட்டத்தில் சிக்கி விமானம் பலமாக குலுங்கியதில், காயம்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மேலும், 1980க்கு பின்னர் இதுபோன்ற சூழலில் சிக்கி 6 பேர்கள் மட்டுமே மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.