டைடன் நீர்மூழ்கி கப்பலை தேட கனடா இவ்வளவு செலவிட்டுள்ளதா!
டைட்டான் நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக ஈடுபடுத்தப்பட்ட ஒரு கனடிய விமானத்திற்காக சுமார் மூன்று மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.
பிரபல டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயிருந்தனர்.
இந்த நீர் மூழ்கி கப்பல் காணாமல் போனமை தொடர்பில் கண்டறிவதற்காக அமெரிக்கா மற்றும் கனடிய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தனஃ
அந்த வகையில் கனடிய விமானப்படைக்கு சொந்தமான சிபி 140 அரோரா என்ற விமானம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டது.
நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்காக குறித்த விமானத்தை பயன்படுத்தியமைக்காக 2.4 டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை கடமையில் ஈடுபடுத்துவதற்காக மணித்தியாலம் ஒன்றுக்கு சுமார் 30,000 டாலர் செலவிடப்பட்டதாக கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் வரிப்பணத்தில் இந்த செலவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது