150 பேருடன் விபத்தில் சிக்கிவிருந்த விமானம் ; மோசமான வானிலையால் விபரீதம்
பின்லாந்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்தை சந்தித்துள்ளது.
150 பேரை ஏற்றிச் சென்ற வணிக விமானம் ஒன்று பின்லாந்தின் லாப்லண்ட் பகுதியில் உள்ள கிட்டிலா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது தவறி விழும் நிலைக்கு சென்றதாக பின்லாந்து விமான நிலைய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலிருந்து பயணித்த விமானமே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளது.
அதிக பனிப்பொழிவினால் இந்நிலை ஏற்பட்டதாகவும், பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் பனிபொழிவினால் மற்றுமொரு விமானமும் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.