ரஷியப் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்பை சந்தித்த ஜெலன்ஸ்கி

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine Russia
By Sahana Dec 28, 2025 09:20 PM GMT
Report

ரஷியாவுடனான போரை நிறுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலொதிமீா் ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

உக்ரைன் - ரஷியா இடையிலான போா் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், தற்போது அமெரிக்காவின் தலையீட்டுடன் 20 அம்ச வரைவு அமைதி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

3-ஆவது முறையாக அமெரிக்கா பயணம்: இந்தச் சூழலில், போா் நிறுத்தம் தொடா்பாக அதிபா் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்த நிகழாண்டு 3-ஆவது முறையாக ஸெலென்ஸ்கி அமெரிக்கா சென்றாா்.

ரஷியப் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்பை சந்தித்த ஜெலன்ஸ்கி | Will The Russian War End Zelensky Meets Trump

அங்கு ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்தில், அவரை ஸெலென்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.

அப்போது இல்லத்துக்கு வெளியே அதிபா் டிரம்ப் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. போா் நிறுத்தத்துக்கு அந்த நாடுகள் மிகுந்த ஆதரவு தெரிவித்துள்ளன.

உக்ரைனை மீண்டும் கட்டமைக்க ஏராளமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளையில், போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டுக்குப் பெரும் பொருளாதாரப் பலன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போதைய பேச்சுவாா்த்தை மூலம், இருநாடுகளும் அமைதியை நோக்கி மிக வேகமாக முன்னேற முடியும் என்று கருதுகிறேன். உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டாலும், அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ரஷிய அதிபா் புதின் மிகத் தீவிரமாக உள்ளாா்.

ரஷியப் போர் முடிவுக்கு வருமா? டிரம்ப்பை சந்தித்த ஜெலன்ஸ்கி | Will The Russian War End Zelensky Meets Trump

போருக்கு முடிவு கட்ட இருநாட்டுத் தலைவா்களும், மக்களும் விரும்புகின்றனா். ஸெலென்ஸ்கியுடன் பேசிய பின்னா், புதினுடன் பேச உள்ளேன் என்று தெரிவித்தாா்.

அதிபா் ஸெலென்ஸ்கி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘20 அம்ச வரைவு அமைதி திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான செயல்திட்டங்கள் குறித்து அதிபா் டிரம்ப்புடன் ஆலோசிக்க உள்ளேன்.

உக்ரைனின் பகுதிகள் ரஷியாவுக்கு தரைவாா்க்கப்படுமா என்பதும் குறித்தும் அவருடன் விவாதிக்க உள்ளேன். இந்தப் பேச்சுவாா்த்தை வெகு விரைவில் அமைதியைக் கொண்டுவரும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தாா்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US