சிகிச்சையிலுள்ள மாணவிக்கு உக்ரைன் அதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கத்யா விளாசென்கோ (Katya Vlasenko)என்ற 16 வயதான உக்ரைன் மாணவி தன்னுடைய 8 வயது சகோதரன் இஹோரை காப்பாற்றிக்கொண்டு தப்பிக்கும்போது காயம் அடைந்தார்.
அதன் பிறகு அவரது தந்தை கத்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த மாணவியை அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) நேரில் சென்று சந்தித்து ஆறுதலுடன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மருத்துவமனையில் மாணவியை சந்தித்த ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)அவர் குணமடைய பூங்கொத்துக்களை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அதிபர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) உடன் பேசிய அந்த மாணவி "அனைவரும் உங்களைப் பற்றி பேசுகிறார்கள்.
டிக்டாக்கில் அனைவரும் உங்களை ஆதரிக்கிறார்கள்" என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy)"அப்போது நாம் டிக்டாக்கை ஆக்கிரமித்துள்ளோம்" என அந்த மாணவியிடம் புன்னகையுடன் கூறினார்.
Zelensky surprises victims in the hospital. He shook the hands of those injured bad one young girl told him he was very popular on TikTok #UkraineRussiaWar #UkraineUnderAttack #UkraineWar #Ukraine #RussiaUkraineCrisis pic.twitter.com/09LYoiLP9r
— Chilly Chills (@WeeliyumF) March 18, 2022
இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.