அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உடன் இந்திய பிரதமர் மோடி கலந்துரையாடல்
வர்த்தகம், எரிசக்தி குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க அதிகவரி விதித்தது. இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

முக்கிய வர்த்தகம்
அதனை தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் முக்கிய வர்த்தகம் தொடர்பான ஆலோசனை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி இன்று போனில் வர்த்தகம், எரிசக்தி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது அமெரிக்க, இந்திய இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைவதில் திருப்தி. மேலும், பிராந்திய, சர்வதேச முன்னேற்றங்கள், சவால்களை எதிர்கொள்ளும் வழிகள் குறித்து விவாதித்தோம்.
மேலும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி, பாதுகாப்புதுறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்தோம். உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்.
அதிபர் ட்ரம்புடன் பேசியது மிகவும் அன்பானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்தது. இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.