கனேடிய பிரதமர் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜீ20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாடு திரும்பிய போது இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தமையை பாதுகாப்புப் படையினர் கண்டு பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பயணத்தை ரத்து செய்து, தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை உடன் சரி செய்ய முடியாது என படையினர் தெரிவிக்கின்றனர்.
மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரையில் பிரதமர் இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.