கனடாவில் தன் மகளை கொடூரமாக கொலை செய்த தாய்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
கனடா நகரமொன்றில் ஆங்கிலமோ பிரெஞ்சு மொழியோ பேசத்தெரியாத பெண் ஒருவர் தன் மகளை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சென்ற வாரம், Laval நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்ற பொலிசார், 7 வயது சிறுமி ஒருத்தி கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதைக் கண்டுள்ளனர்.
மாரடைப்பால் துடித்துக்கொண்டிருந்த அந்த சிறுமிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் உயிர் காக்கும் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவளை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அந்த வீட்டிலிருந்த ஆறு பெரியவர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால், அங்கிருந்த யாருக்கும் ஆங்கிலமோ பிரெஞ்சு மொழியோ தெரியாததால் அவர்களால் அந்த குடும்பத்தினரிடமிருந்து எந்த தகவலையும் பெற இயலவில்லை.
இந்நிலையில், உயிரிழந்த அந்த சிறுமியின் தாய் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கவனக்குறைவு காரணமாக உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.