அதிவேகமாக வாகனம் செலுத்திய சாரதிக்கு எதிராக வழக்கு
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 11-இல் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட இரு மடங்கு வேகத்தில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 24 வயது இளைஞர் மீது ஒண்டாரியோ மாகாண காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹன்ட்ஸ்வில் பகுதியில் உள்ள கிரியர் ரோட்டிற்கு அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகம் செல்ல வேண்டிய பகுதியில், சுமார் 197 கிலோமீட்டர் வேகத்தில் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த போலீசார் உடனடியாக அந்த காரை மறித்து நிறுத்தினர்.

காரை ஓட்டி வந்த நியூகாசில் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்கியதற்கான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை நடவடிக்கையாக அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கார் 14 நாட்களுக்குக் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞர் வரும் செப்டம்பர் மாதம் ஒண்டாரியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.