ஒன்டாரியோவில் கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரிப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கலிடன் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை சுமார் 1 மணியளவில், பெர்ட்யூ கோர்ட் (Perdue Court) பகுதியில் அமைந்துள்ள ஒரு வணிக நிலையம் முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில காலமாக கலிடன் மற்றும் டஃபரின் கவுண்டி பகுதிகளில் மிரட்டல் மூலம் பணம் வசூலிக்கும் (Extortion) சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்திருந்தது.

2023 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, இப்பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட மிரட்டல் வசூல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சில சம்பவங்களில் வீடுகள் மற்றும் உள்ளூர் வணிக நிலையங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் “திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்” என கலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கப்பம் கோரும் நோக்கில் மிரட்டல் விடுப்பதற்காக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.