கல்கரியில் சந்தேகத்திற்கு இடமான மரணம்: மூவர் கைது
கனடாவின் கால்கேரி நகரின் தென்கிழக்கு பகுதியில் நடந்த சந்தேகத்துக்கிடமான மரணம் தொடர்பாக கால்கேரி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
அவன்யு மற்றும் ஸ்ட்ரீட் சந்திப்பில் ஒரு ஆண் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதும் பொலிஸார் முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்துக்கு அருகில் அமைந்துள்ள பள்ளிக்கூடமொன்று விசாரணை காரணமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒரு கைவிடப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் மேலும் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான தகவல்கள் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.