ஒட்டாவாவில் முதிய தம்பதிகள் மரணம் – கொலை-தற்கொலை என பொலிஸார் உறுதி
ஒட்டாவா நகரின் பர்ஹேவன் பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருவர் மரணமடைந்த சம்பவம் கொலை-தற்கொலை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மரணமடைந்தவர்கள் விர்ஜீனியா தியோரெட் (82) மற்றும் கர்ட் தியோரெட் (84) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடல்கள் பீசன்ட் ரன் டிரைவ் வீடில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு மீட்கப்பட்டன.
“அந்த வீடிலிருந்து வந்த 911 அழைப்பைத் தொடர்ந்து, எங்களை அழைத்தவர் திரு. தியோரெட். அவர் பின்னர் தன்னைத்தானே கொன்றுகொண்டார்,” என ஒட்டாவா போலீசார் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
“இது மிகவும் மனதை கலங்கவைக்கும் துயரச்சம்பவம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பீசன்ட் ரன் டிரைவ், பர்ஹேவன் பகுதி, எப்போதும் அமைதியான வீதியாகக் கருதப்படுகிறது.
அங்கு இளம் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்கள் சமமாக வசிக்கின்றனர். “இந்த வீதி எப்போதும் அமைதியானது.
இது போன்ற சம்பவம் நடக்குமென நினைக்கவே முடியாது,” என அங்குள்ள குடியிருப்பாளரான டோனி ஸ்டீவன்ஸ் கூறினார்.