துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்! பரபரப்பு சம்பவம்
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் 14 மாநில பொலிஸ் அதிகாரிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-06-2023) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் சியாபாஸ் மாநிலத்தின் குடிமக்கள் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடத்தப்பட்ட 14 பொலிஸ் அதிகாரிகளும் ஆண்கள் என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க வான் மற்றும் தரைப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
சியாபாஸின் தலைநகரை நோக்கி பொலிஸ் அதிகாரிகள் பயணம் செய்த போது டிரக் வண்டியில் வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அவர்களை கடத்தி சென்றனர்.
அந்த டிரக் வண்டியில் இருந்த பெண்கள் இறக்கிவிடப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை சமீபக் காலமாக குவாத்தமாலா – மெக்சிகோ எல்லைப் பகுதியில் மோதல் போக்கு அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.