ஹமில்டனில் 80 நிமிட இடைவெளியில் 3 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
ஹமில்டனில் 80 நிமிடங்கள் இடைவெளியில் மூன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொவாக் மற்றும் மக்னோலியா வீதிகளுக்கு அருகாமையில் முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
நபர் ஒருவர் கவனயீனமாக துப்பாக்கியை பயன்படுத்தியதனால் துப்பாக்கி வெடித்து வீட்டுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று பத்து நிமிட இடைவெளியில் ஹால்டன் அவன்யூ பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், டக்ளஸ் மற்றும் மார்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
வீடு ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.