ரொறன்ரோவில் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி
கனடாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சித்த 4 பேரை தேடி போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரொறன்ரோ யோங் மற்றும் குயின்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை இடுவதற்கு இந்த கும்பல் முயற்சி செய்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்துடன் நான்கு ஆண்கள் தொடர்பு பட்டு உள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
எனினும் இந்த கும்பலினால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையிட முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நான்கு பேரும் கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படங்கள் போலீசாரினால் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டால் அது குறித்து அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.