அவுஸ்திரேலியாவில் 16 வயது சிறுவனை சுட்டுகொன்ற பொலிஸார்
அவுஸ்திரேலியாவின் பெர்த்தின் பகுதியில் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 16 வயது சிறுவனை பொலிஸார் சுடடு கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த சிறுவன் பொதுமக்களை கத்தியால் தாக்கியுள்ளதாக இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாலிபர் கத்தியுடன் பொலிஸாரை நோக்கி வந்துள்ளார்.
கத்தியை கீழே இறக்கிவிட்டு சரணடையுமாறு பொலிஸார் கூறியதை பொருட்படுத்தாமல் அந்த சிறுவன் மீண்டும் தொடர்ந்து தாக்கியதால் பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.