கனடாவில் இடம் பெற்று வரும் டாக்ஸி மோசடி குறித்து எச்சரிக்கை
கனடாவின் ரொறன்ரோவில் இடம் பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவின் சில பகுதிகளில் டாக்ஸி கொடுக்கல் வாங்கல்களின் மோது மோசடிகள் இடம் பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஆறு சந்தேக நபர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிஸார் இது தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களாக டாக்ஸி தொடர்பான கொடுக்கல் வாங்கல் மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலர் தங்களை டாக்ஸி சாரதிகளாகவும், பயணிகளாகவும் என அடையாளப்படுத்திக் கொண்டு மோசடிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தங்களால் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது என கூறுவதாகவும் இதனை தொடர்ந்து அருகாமையில் இருப்பவர்கள் தங்களது அட்டைகளை பயன்படுத்தி கட்டணங்களை செலுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது உள்ளீடு செய்யப்படும் இலக்கங்களை பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெறுவதாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் சிலர் கடன் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு உதவும் போது அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி இந்த மோசடிகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகம் ஏற்படாத வகையில் இந்த அட்டை கொடுப்பனவு மோசடிகள் இடம் பெறுவதாகவும் தகவல்களை பெற்றுக்கொண்டு அதன் ஊடாக பண மோசடிகள் இடம் பெறுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
மோசடியுடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்னர்.