பெண் பொலிஸ் அதிகாரியை கடத்திச் சென்று உடலை சிதைத்த கொடூரம்
மெக்சிகோவில் பெண் பொலிஸ் அதிகாரியை கடத்திச் சென்று, துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி உடலை சிதைத்து வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
மெக்சிகோவின் Veracruz பகுதியில் காவல்துறையில் பணியாற்றி வந்துள்ளார் Vanessa Torres. இவரது சடலம் ஜனவரி 12ம் திகதி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் அதன் விளைவாக கொடூரமான மரணத்திற்கு காரணமான நபரை பெண்கள் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும் என்றும் அவரது சக பொலிசார் கோரியுள்ளனர்.
போதை மருந்து கடத்தல் குழுவுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுத்து வந்த Vanessa Torres திடீரென்று கடத்தப்பட்டார். இவருடன் ஆண் பொலிசார் ஒருவரும் கடத்தப்பட, புதன்கிழமை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவரது மார்புகள் துண்டிக்கப்பட்டு, துஸ்பிரயோகத்திற்கு இலக்கான அடையாளங்கள் இருந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.