ஆசிரியர் மீது அரசியல் கட்சி உறுப்பினர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல்!
ஆசிரியர் ஒருவர் மீது தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் காயமடைந்த ஆசிரியர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டாரவளை - பூனாகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீரற்ற வானிலை
சீரற்ற வானிலை காரணமாக, கு பாடசாலை பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில், அதனை பார்வையிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அங்கு சென்றிருந்தனர்.
இதன்போது, பாடசாலை நிர்வாகத்திற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில், அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹல்தமுல்லை பிரதேச சபை தவிசாளர் அசோக்குமார் மற்றும் யோகராஜ் உள்ளிட்ட தரப்பினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக, தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனவும், தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.