கனடா தியாகங்களை செய்ய ஆயத்தமாக வேண்டும்
கனடா தியாகங்களைச் சயெ்ய ஆயத்தமாக வேண்டுமென பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஒட்டாவாவில் பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை முன்னிட்டு தனது அரசின் முக்கிய முன்னுரிமைகளை விளக்கியுள்ளார்.
கனடாவை ஒரு “வலுவான, போட்டியாளரான, உலகச் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரமாக” உருவாக்குவதே அரசின் நோக்கம் என கூறியுள்ளார்.

இப்போதே செயல்படாவிட்டால் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும். நம் பொருளாதாரத்தை மாற்றுவது எளிதானது அல்ல — அதற்கு சில தியாகங்களும் நேரமும் தேவைப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வீண்செலவுகளை குறைத்து, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியபோது “பொறுப்புடன், வெளிப்படையாக, நியாயமாக” நடப்பதாக உறுதியளித்தார்.
மார்க் கார்னி தனது உரையில், அமெரிக்காவுடன் கனடாவின் வர்த்தக உறவுகள் மாறி வரும் சூழலில், அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்காவைத் தவிர்ந்த ஏற்றுமதிகளை இரட்டிப்பாக்கும் இலக்கை அரசாங்கம் நோக்கி செயல்படுகிறது என அறிவித்துள்ளார்.