ஹாலிவுட் படத்தை இயக்க முடிவு செய்த உலகப்புகழ் பெற்ற ‘பாப்’ இசை பாடகி!
உலகப்புகழ் பெற பாப் இசை பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஹாலிவுட் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இவர் சமீபத்தில்தான் தனது தந்தையின் பாதுகாப்பிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் ஹாலிவுட் படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தெரிவித்தது,
இரு ஹாலிவுட் படத்தை இயக்குவது பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். எனது இந்தப் படம் குவென்டின் டரான்டினோவின் தற்காப்புக்கலை மையமாக கொண்ட ‘கில்பில்’ படத்தைப்போல இருக்கும் என பிரிட்னி ஸ்பியர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் என் வாழ்க்கையில் பாதி நாட்களை கூண்டில் அடைக்கப்பட்ட விலங்காக இருந்ததாக உணர்கிறேன். அதனால் தான் இப்போது தன்னை தானே இயக்க நான் தேர்வு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
இப்படத்தில் நான் எனக்கு மேக் அப் போடுவேன், நானே ஆடை அணிவேன் நானே இசை அமைப்பேன் என பிரிட்னி ஸ்பியர்ஸ் கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரேவ் நியூ கேர்ள் என்ற பாடலுடன் 2 வித்தியாசமான ஆடைகளில் நடனமாடும் காணொளியை பிரிட்னி ஸ்பியர்ஸ் வெளியிட்டார். அந்த காணொளி 2 மணி நேரத்தில் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.