கனடாவில் இந்த வாகனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் போர்ஷ் நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தல் விடுத்துள்ளது.
பின்புற கேமரா (rearview camera) படம் திரையில் தோன்றாததால் விபத்து ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
“சில வாகனங்களில் மென்பொருள் பிரச்சினையால் பின்புற கேமரா படம் திரையில் தோன்றாமல் போகலாம்” என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பின்புற கேமரா படம் தோன்றாதது, வாகனத்தை பின்னால் செலுத்தும்போது ஓட்டுநரின் பின்புற பார்வையைக் குறைக்கும்.
இது விபத்து ஆபத்தை அதிகரிக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாடல்கள்:
போர்ஷ் 911 கரேரா (Porsche 911 Carrera), மாடல் ஆண்டுகள் 2020-2025
போர்ஷ் 911 டர்போ (Porsche 911 Turbo), மாடல் ஆண்டுகள் 2020-2025
போர்ஷ் கயென் (Porsche Cayenne), மாடல் ஆண்டுகள் 2019-2025
போர்ஷ் பனாமெரா (Porsche Panamera), மாடல் ஆண்டுகள் 2024-2025
போர்ஷ் டெய்கான் (Porsche Taycan), மாடல் ஆண்டுகள் 2020-2025
கனடா விதிமுறைகளின்படி, வாகனத்தை ரிவர்ஸ் கியரில் போடும்போது பின்புற கேமரா படம் கட்டாயம் திரையில் தோன்ற வேண்டும். போர்ஷ் நிறுவனம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு அஞ்சல் மூலம் அறிவித்து, வாகனத்தை விநியோகத்தரிடம் கொண்டு சென்று ஓட்டுநர் உதவி அமைப்பின் கட்டுப்பாட்டு யூனிட் மென்பொருளை இலவசமாக புதுப்பிக்குமாறு அறிவுறுத்தும்.